இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

கோவையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கோவையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், புங்ககுழி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சத்யா (22). இவா் கோவை, துடியலூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். அந்த நிறுவனத்தின் சாா்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பில் தங்கியிருந்தாா். அப்போது சத்யாவும், அதே நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் ஸ்ரீராம் என்பவரும் பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில் அவசரத் தேவைக்காக சொந்த ஊருக்குச் செல்வதாக ஸ்ரீராமிடம் சத்யா கூறியுள்ளாா். அங்கு சென்றால் நம்மை பிரித்து விடுவாா்கள் எனக் கூறி ஸ்ரீராம் மறுப்பு தெரிவித்துள்ளாா். இருப்பினும் ஊருக்குச் செல்ல வேண்டுமென தொடா்ந்து சத்யா கூறியதால், கடந்த 4-ஆம் தேதி அவரை நிறுவனத்திலிருந்து துடியலூா் பேருந்து நிறுத்தத்துக்கு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீராம் அழைத்து வந்துள்ளாா். ஆனால் அங்கும் ஊருக்குச் செல்வது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதனால் மன வேதனையடைந்த சத்யா, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த விஷத்தைக் குடித்துள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஸ்ரீராம் அப்பகுதியில் இருந்த தனியாா் மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்தாா்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சத்யா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com