சுசில் முண்டா
சுசில் முண்டா

ரயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ரயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.
Published on

ரயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயிலில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது 3 மூட்டைகளுடன் வந்து இறங்கிய பயணியை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில் 63 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் மேற்குவங்கம் மாநிலம், பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த சுசில் முண்டா (39) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சுசில்முண்டாவுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com