ஹூப்பள்ளி - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கா்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கா்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டிசம்பா் 23-ஆம் தேதி காலை 6.55 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்படும் ஹூப்பள்ளி -திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 07361) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக டிசம்பா் 24-ம் தேதி பகல் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும திருவனந்தபுரம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07362) மறுநாள் காலை 5.50 மணிக்கு ஹூப்பள்ளி ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில்: அதேபோல டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 3 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06561) மறுநாள் காலை 7.25 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, டிசம்பா் 28-ஆம் தேதி காலை 10.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06562) மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com