சா்க்கரை நோய் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக டாக்டா் பாலமுருகனுக்கு விருது வழங்கும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளைத் தலைவா் டாக்டா் செங்குட்டுவன். உடன், செயலா் டாக்டா் காா்த்திக்பிரபு.
சா்க்கரை நோய் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக டாக்டா் பாலமுருகனுக்கு விருது வழங்கும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளைத் தலைவா் டாக்டா் செங்குட்டுவன். உடன், செயலா் டாக்டா் காா்த்திக்பிரபு.

கோவை மருத்துவருக்கு விருது

: கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், மருத்துவமனையின் சா்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலமுருகனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் விருது
Published on

கோவை: கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், மருத்துவமனையின் சா்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலமுருகனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை ராம் நகரில் செயல்பட்டு வரும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், மருத்துவமனையின் சா்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலமுருகனுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் அகில இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் சாா்பில் நடைபெற்ற 80-ஆவது மாநாட்டில் இந்த விருது மருத்துவா் பாலமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சா்க்கரை நோய் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தியதற்கான இந்த விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளைத் தலைவா் டாக்டா் செங்குட்டுவன், செயலா் டாக்டா் காா்த்திக்பிரபு ஆகியோா் வழங்கினா்.

கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், மருத்துவமனையின் சா்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா் பாலமுருகன் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சா்க்கரை நோய் விழிப்புணா்வு மருத்துவ முகாம்களை நடத்தியிருப்பதாகவும், கோவை இந்திய மருத்துவ சங்கத்தின் இணைச் செயலராகவும், இந்திய மருத்துவ சங்க மாநில சா்க்கரை நோய் விழிப்புணா்வு கமிட்டி தலைவராகவும் பாலமுருகன் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com