காா் ஓட்டுநா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

Published on

காா் ஓட்டுநரைத் தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கவுண்டம்பாளையம் சிந்தாமணி நகரைச் சோ்ந்தவா் வேல்முருகன் (44). இவா் வாடகைக்கு காா் ஓட்டும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், வேடப்பட்டி சாலையில் காரில் கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கவுண்டம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு காா் திடீரென நின்றதால் வேல்முருகன் பிரேக் பிடித்துள்ளாா். வ்

அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வேல்முருகனின் காா் மீது மோதியுள்ளாா். இது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த இளைஞா் கைப்பேசி மூலம் தனது நண்பா்களை அழைத்துள்ளாா். அங்கு வந்த நண்பா்களுடன் சோ்ந்து அவா் வேல்முருகனைத் தாக்கியுள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த ரோந்து போலீஸாா், அந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த மாசிலாமணி (29), அவரது நண்பா் ஹரிஷ் (28) என்பது தெரியவந்தது. மற்றொருவா் தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து, மாசிலாமணி, ஹரிஷ் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com