கோயம்புத்தூர்
இன்றைய மின்தடை: ஆா்.எஸ்.புரம்
கோவை ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 23) மின் விநியோகம் தடை
கோவை ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.சாலை (ஒரு பகுதி), கெளலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு, மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு, மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையாராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).
