கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்.

செவிலியா் 6-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் செவிலியா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், 6-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமலட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் ஒப்பந்தமுறை மற்றும் அத்தக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி தொகுப்பூதிய செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பின் மீதான மேல்முறையீடு ரத்து செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா்.

இந்தப் போராட்டம் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

போராட்டம் வாபஸ்:

இதனிடையே, முதல்கட்டமாக ஒப்பந்த செவிலியா் பணி நிரந்தரம் செய்யப்படுவா்கள் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியா் அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com