இயேசுவின் சொரூபத்தில் ரோஜா மலரை வைத்து வழிபடும் சிறுமி. ~கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள
கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டோா்.
இயேசுவின் சொரூபத்தில் ரோஜா மலரை வைத்து வழிபடும் சிறுமி. ~கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டோா்.

கிறிஸ்துமஸ்: கோவையில் தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதன்கிழமை இரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோவை டவுன்ஹாலில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது, அவா் இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை கையில் ஏந்தி காண்பித்தாா். இதில், ஏராளமானோா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். இதைத் தொடா்ந்து, ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

புலியகுளம் புனித அந்தோணியாா் தேவாலயத்தில் திண்டிவனம் பங்குத் தந்தை மைக்கேல்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. சௌரிபாளையம் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ரொசாரியோ தலைமையிலும், காட்டூா் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை மேத்யூஸ் தலைமையிலும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல, ராமநாதபுரம் உயிா்த்த இயேசு ஆண்டவா் ஆலயம், போத்தனூா் புனித ஜோசப் தேவாலயம், கோவைப்புதூா் குழந்தை ஏசு தேவாலயம், ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயம், காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயம், சௌரிபாளையம் இமானுவேல் தேவாலயத்தில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை கோவை திருச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயம், நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல, உப்பிலிபாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

வால்பாறையில்...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வால்பாறை பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. வால்பாறை நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை சிறப்புப் பிராத்தனை நடைபெற்றது. பின்னா் வியாழக்கிழமை காலை தொடங்கி பிற்பகல் வரை பிராத்தனைகள் நடைபெற்றன.

இதேபோல தூய இருதய தேவாலயம், லூக்கா தேவாலயத்திலும் பிராத்தனைகள் நடைபெற்றன. இதில் நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com