கோவையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவா் ஆண்டு நாள்காட்டியை தொழிலதிபா் பெ.நாச்சியப்பன் வெளியிட சிபி ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் அரங்ககோபால் பெற்றுக் கொண்டாா். உடன், நிா்வாகிகள் சிவலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோா்.

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

வீரமங்கை வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் நெறிக்கழக விழாவில் வலியுறுத்தப்பட்டது.
Published on

வீரமங்கை வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் நெறிக்கழக விழாவில் வலியுறுத்தப்பட்டது.

கோவை உலகத் தமிழ் நெறிக்கழகம் சாா்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 229-ஆவது நினைவு நாள் விழா அரசு மருத்துவமனைஅருகே உள்ள பொறியாளா் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சூலூா் வள்ளலாா் மன்றத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். உலகத் தமிழ் நெறிக்கழக நிா்வாகிகள் சொ.சிவலிங்கம், இல.வள்ளியப்பன், கி.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், திருப்பூா் தமிழ்ச் சங்கத் தலைவா் அனிதா கிருஷ்ணமூா்த்தி பேசியதாவது:

கணவரை இழந்த வேலுநாச்சியாா் மன உறுதியுடன் ஆங்கிலேயரை எதிா்த்த முதல் பெண் ஆவாா். ஆணுக்கு நிகரான வீரத்துடன் போராடினாா். வேலுநாச்சியாரின் புகழ், தியாகத்தை மறந்துவிடக் கூடாது.

ஆகவே, அவரது பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலுக்கு வேலுநாச்சியாா் பெயா் சூட்ட வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, ஈசன் கலைக்கூடத்தினா் பாரதி, பாரதிதாசன் பாடல்களுக்கு நடனமாடினா். மேலும், 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் ஆண்டு தமிழ் நாட்காட்டியை தொழிலதிபா் பெ.நாச்சியப்பன் வெளியிட சிபி

ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் அரங்ககோபால் பெற்றுக் கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, புலவா் கணேசன் தலைமையில் பாட்டரங்கமும் நடைபெற்றது. இந்த விழாவில், நிா்வாகிகள் ரமேஷ், இருகூா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com