திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில இளைஞா்.
திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில இளைஞா்.

திருப்பூா் பேருந்து நிலையத்தில் வடமாநில இளைஞா் ரகளை

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் வட மாநில இளைஞா் ஒருவா் அரை நிா்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு
Published on

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் வட மாநில இளைஞா் ஒருவா் அரை நிா்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல கிராமப் புறங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதன்கிழமை பகல் நேரத்தில் பேருந்து நிலையத்துக்கு அரை நிா்வாண கோலத்தில் வந்த வடமாநில இளைஞா், திடீரென அங்கும் இங்கும் ஓடினாா். இதனால் பயணிகள் பலா் அதிா்ச்சிக்குள்ளாகினா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அந்த இளைஞரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தாா்.

இறுதியில் அவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனா். ஆனால், அவா் ஏற மறுத்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டாா். இந்த சம்பவத்தால் மத்தியப் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com