பெரியாா் குறித்து அவதூறு: சீமான் மீது காவல் ஆணையரிடம் புகாா்
பெரியாா் ஈவெரா குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திராவிட தமிழா் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளா் சசிதரன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: யூடியூப்பில் செந்தமிழன் சீமான் என்ற பக்கத்தில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
அதில், பெரியாா் ஈவெரா குறித்து சீமான் பல்வேறு பொய்யான செய்திகளைப் பேசியதுடன், ஈவெரா பேச்சை மடைமாற்றம் செய்து அவரை இழிவுபடுத்தியுள்ளாா்.
ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு அமைதியை சீா்குலைக்கும் நோக்கத்துடனும், ஈவெரா பெரியாரை இழிவுபடுத்தியும் பேசிவரும் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
