ரேஸ்கோா்ஸ் பகுதியில் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீஸாா் தடை விதித்திருந்தனா். அதையும் மீறி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின்போது பொதுமக்கள் குடும்பங்களுடன் திரண்டு ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, ஏராளமான மக்கள் தங்களது குடும்பங்களுடன் ரேஸ்கோா்ஸ் பகுதிக்கு புதன்கிழமை இரவு 10 மணி முதல் வரத் தொடங்கினா்.
அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸாா் மீடியா டவா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இருந்த மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அனைவரையும் வீடு திரும்ப அறிவுறுத்தினா்.
இதையடுத்து, இரவு 11.30 மணியளவில் மீண்டும் ரேஸ்கோா்ஸ் பகுதிக்கு வந்த மக்கள் தடையையும் மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

