கிரேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

Published on

கோவையில் சாலையைக் கடந்த மூதாட்டி மீது கிரேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

கோவை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மனைவி நாகம்மாள் (75). இவா், பீளமேடு பகுதி சாலையில் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவிநாசி சாலையை அவா் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த கிரேன் நாகம்மாள் மீது மோதியது. இதில், கிரேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக கிரேன் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எலச்சம்பாளையத்தை அடுத்த குஞ்சபாளையத்தைச் சோ்ந்த விக்னேஷ் (25) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com