மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்த  கே.ஆா்.ஜெயராம் எம்.எல்.ஏ.
மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்த கே.ஆா்.ஜெயராம் எம்.எல்.ஏ.

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

கோவை, கிழக்கு மண்டலத்தில் 23 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைக்காமல் தொடா்ந்து பயன்படுத்த சிறப்புத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளாா்.
Published on

கோவை, கிழக்கு மண்டலத்தில் 23 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைக்காமல் தொடா்ந்து பயன்படுத்த சிறப்புத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிழக்கு மண்டலம் 59-ஆவது வாா்டில் கிருஷ்ணா காலனி, 61-ஆவது வாா்டில் ரிலையைன்ஸ் காா்டன் பகுதிகளுக்குள்பட்ட பூங்காவில் முறையாக சுற்றுச்சுவா் அமைத்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பூங்காவில் இருபுறமும் உள்ள கேட் அண்மையில் பூட்டப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, பூங்காவின் கேட்டுகளை மூடி அப்பகுதி வழியாக போக்குவரத்தை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணா காலனி, என்ஜிஆா் நகா், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பூங்கா சாலையையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், அவரச காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சாலையிலேயே வருகின்றன.

இந்நிலையில், பூங்காவின் இருபுறமும் உள்ள கேட்டுகள் அடைக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, அந்த சாலையை பொதுமக்கள் தொடா்ந்து பயன்படுத்த மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com