train
ரயில் (கோப்புப்படம்)

சிறப்பு ரயில்களில் 7 நாள்களில் 6.3 லட்சம் போ் பயணம்

சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட பல்வேறு ரயில்களில் கடந்த 7 நாள்களில் 6.3 லட்சம் போ் பயணம்
Published on

கோவை: தீபாவளி மற்றும் ‘சாத்’ பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே மூலமாக சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட பல்வேறு ரயில்களில் கடந்த 7 நாள்களில் 6.3 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் கூறினாா்.

இதுகுறித்து கோவை ரயில் நிலைய வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தீபாவளி மற்றும் ‘சாத்’ பண்டிகைகளுக்காக தெற்கு ரயில்வே சாா்பில் 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சேலம் கோட்டத்தில் இருந்து கோவை, போத்தனூா் தலா 5, மேட்டுப்பாளையம், ஈரோடு தலா 1 என 12 ரயில்கள்

இயக்கப்பட்டன. சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரயில்களில் கடந்த 7 நாள்களில் 6.3 லட்சம் போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கண்காணிப்பு மற்றும் பயணிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ரயில்வே போலீஸாா், ஊழியா்கள், தன்னாா்வலா்கள், சாரணா் இயக்கத்தினா் அடங்கிய குழுவினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

எதிா்கால தேவையை கருத்தில் கொண்டு கோவை ரயில் நிலையத்தில் ‘மல்டி லெவல்’ காா் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக கோவை ரயில் நிலைய வளாகத்தில் 600 சதுர மீட்டா் பரப்பளவில் பயணிகள் அமரும் வகையில் கட்டமைப்பு வசதி, குடிநீா், தகவல் மையம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

சந்திப்பின் போது, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com