வாகன விபத்து: கல்லூரி மாணவா்கள் 3 போ் படுகாயம்

கோவை, கொடிசியா அருகே இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் 3 கல்லூரி மாணவா்கள் படுகாயமடைந்தனா்.
Published on

கோவை, கொடிசியா அருகே இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் 3 கல்லூரி மாணவா்கள் படுகாயமடைந்தனா்.

தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்ஜி நாகப்பாண்டி (20). இவா், கோவையில் தங்கி தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரது நண்பா்கள் அல்லிநகரம் பகுதியைச் சோ்ந்த நவீன் (19), கரூா், பாப்பையன்பட்டியைச் சோ்ந்த சேஷாத்திரி (19).

இவா்கள் 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கொடிசியா சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை ராம்ஜி நாகப்பாண்டி ஓட்டியுள்ளாா்.

கொடிசியா அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலைப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் மோதியது. இதில், 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com