கோயம்புத்தூர்
ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்கள் திருட்டு
குனியமுத்தூா் அருகே கிரில் ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்களைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குனியமுத்தூா் அருகே கிரில் ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்களைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, குனியமுத்தூா்- இடையா்பாளையம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (42). இவா், அப்பகுதியில் கிரில் கேட் தயாரிக்கும் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி இரவு ஒா்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். அக்டோபா் 22-ஆம் தேதி காலை வந்தபோது ஒா்க் ஷாப்பின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பை வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து தா்மராஜ் அளித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

