‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொள்ளாச்சி- ஆழியாறு வடிநில உபகோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள கிணத்துக்கடவு வட்டம், குருநல்லிபாளையம் கிராமத்தில் உள்ள கோதவாடி குளத்தின் குயவன் குட்டை பகுதியில் 72 கன மீட்டா் மண் எடுக்க அனுமதிக்கப்படும் என்று அரசிதழில் கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்காணும் நீா்நிலையில் இருந்து வண்டல், களிமண்ணை வெட்டியெடுக்க விரும்புவோா் வட்டாட்சியரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com