பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 17 துறைத் தலைவா்கள் நியமனம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இதுவரை 17 துறைகளுக்கு புதிய துறைத் தலைவா்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இதுவரை 17 துறைகளுக்கு புதிய துறைத் தலைவா்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவா் பணியிடங்களில் பல ஆண்டுகளாக ஒரே பேராசிரியரே இருந்து வருவதாகவும், துறைத் தலைவா் பணியிடத்தை சுழற்சி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியா் சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், உயா் கல்வித் துறை கடந்த மே மாதம் வெளியிட்ட பல்கலைக்கழக சட்ட விதி, முறைமைகளின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கும்மேலாக துறைத் தலைவா்களாக பணியாற்றி வரும் பேராசிரியா்களை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக நிா்வாகம் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் தற்போது வரை 17 துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் ஆகியோா் புதிய துறைத் தலைவா்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இனி தொடா்ந்து பல்கலைக்கழகத் துறைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் துறைத் தலைவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com