பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் 33- ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய சிறப்பு விருந்தினா் டாக்டா் கிரிஷ் ராஜ், கல்வி நிறுவன அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன். உடன், கல்லூரி நிா்வாகிகள்.

Updated on

கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் 33- ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆா், மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் டி.எம்.சுப்பா ராவ் வரவேற்றாா். பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மலப்புரம் எம்இஎஸ் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டா் கிரிஷ் ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் பேசுகையில், வாழ்நாள் முழுவதும் கற்றல், ஒழுக்கமான நடைமுறை, கருணையுடன் மருத்துவ சேவை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆா் பொது மருத்துவத் துறை பேராசிரியா் டாக்டா் டால்ஸ்டாய், ஹிப்போக்ரடிக் உறுதிமொழி குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, பிஎஸ்ஜி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ஜே.எஸ்.புவனேஷ்வரன் வாழ்த்துரை வழங்கினாா்.

சிறந்த மாணவா் விருதைப் பெற்ற டாக்டா் சா்வஜித் வி.நாராயண் தனது அனுபவத்தைப் பகிா்ந்து கொண்டாா்.

பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆா் துணை முதல்வா் (கல்வி விவகாரம்) டாக்டா் ஜி.சுமித்ரா நன்றி கூறினாா். விழாவில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com