கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹஜ் யாத்ரிகா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஹஜ் பயணிகள் 50 போ் பங்கேற்றனா்.
இவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல்நிலை பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை மற்றும் சிறப்பு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த முகாம் வரும் 7-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதன்மூலமாக தினமும் தலா 50 போ் வீதம் மொத்தம் 300 ஹஜ் யாத்திரிகா்கள் பயனடைவா் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

