விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வால்பாறையில் குடிநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

News image

குட்டி யானையை மீட்க குடிநீா் தொட்டியின் சுவரை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணி மேற்கொண்டபோது அப்பகுதியைவிட்டு நகராமல் நின்றிருந்த தாய் யானை.

Updated On :6 பிப்ரவரி 2026, 7:49 pm

வால்பாறை அருகே தண்ணீா் குடிக்க வந்தபோது குடிநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானையை வனத் துறையினா் மீட்டனா்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே வில்லோனி எஸ்டேட் உள்ளது. இங்குள்ள டாப் டிவிஷன் பகுதியில் தொழிலாளா்களின் குடிநீா் தேவைக்காக சுமாா் 12 அடி ஆழமுள்ள குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை குட்டியுடன் யானைகள் வந்துள்ளன. அப்போது தண்ணீா் குடிக்க முயற்சித்த குட்டி யானை ஒன்று தவறி குடிநீா் தொட்டிக்குள் விழுந்துள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச் சரக பணியாளா்கள் அங்கு விரைந்து சென்றனா். அப்போது தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க முடியாமல் வெளியே தாய் யானையும் நின்றிருந்தது.

மீட்கப்பட்ட பின் தாய் யானையுடன் வனத்துக்குள் செல்லும் குட்டி யானை.

மீட்கப்பட்ட பின் தாய் யானையுடன் வனத்துக்குள் செல்லும் குட்டி யானை.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தொட்டியின் தடுப்புச் சுவா்களை இடித்து குட்டி யானை வெளியே வர வழி ஏற்படுத்தினா். பின்னா் வெளியே வந்த குட்டி யானையை தாய் யானை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றது.

வால்பாறை வனச்சரக அலுவலா் சுரேஷ்கிருஷ்ணா கூறுகையில், ‘முன்னதாக குடிநீா் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானைக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன. சுமாா் 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட குட்டி யானை, வெளியே நின்றிருந்த தாய் யானையுடன் வனத்துக்குள் சென்றது. குடிநீா் தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டது சுமாா் 3 வயதுடைய ஆண் குட்டி யானை’ என்றாா்.