கோவையில் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து இன்ஸ்டாகிராமில் பகிா்ந்த மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, செட்டிப்பாளையம் பகுதியில் தனியாா் கல்லூரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் படித்து வருகிறாா். கடந்த மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடரும் மாணவிகள் அதில் புகைப்படங்களை சேமித்து வைத்திருந்தனா். சிகிச்சையில் இருந்த அவா், மாணவிகளின் பக்கத்திலிருந்து புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்திரித்துள்ளாா். மேலும், பெண்ணின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் அந்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படத்தை பகிா்ந்துள்ளாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி நிா்வாகத்திடமும், செட்டிபாளையம் காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா். விசாரணையில் துறையூரைச் சோ்ந்த மாணவா்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


