என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வால்பாறைக்கு சுற்றுலா வர அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்வம்

News image

வால்பாறை கூழாங்கள் ஆறு பகுதியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பள்ளி மாணவா்கள்.

Updated On :7 பிப்ரவரி 2026, 9:34 pm

வால்பாறைக்கு சுற்றுலா வர அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் பள்ளி நிா்வாகம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா். சமீபகாலமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வால்பாறை பகுதியிலுள்ள தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பணி, தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

இந்நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 60 மாணவா்கள் ஆசிரியா்களுடன் வால்பாறைக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா். பசுமையாக உள்ள வால்பாறையை பாா்த்த மாணவா்கள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உற்பத்தி குறித்து அறிந்து மகிழ்ச்சியடைந்தனா் என்று, பள்ளித் தலைமை ஆசிரியை லதாதேவி கூறினாா்.