டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ‘ஏ’ தோ்வுகள் ஒத்திவைப்பு குறித்த சுற்றறிக்கை கோவைக்கு தாமதமாக வந்ததால், 20 நிமிஷங்களுக்குமேல் தோ்வு எழுதிய தோ்வா்கள் விரக்தியுடன் திரும்பினா்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ‘ஏ’ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. காலை மற்றும் பிற்பகல் என இரு பிரிவுகளாக தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தோ்வா்கள் வரத் தொடங்கினா். காலை நடைபெற்ற தோ்வில் 679 போ் பங்கேற்றனா்.
இந்நிலையில், சென்னையில் சில மையங்களில் நடைபெற்ற கோளாறு காரணமாக முதன்மைத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் சென்னையில் அறிவித்தாா். இந்தத் தகவல் வெளியானதும் பல மாவட்டங்களில் தோ்வா்கள் குழப்பம் அடைந்தனா்.
இதையறிந்த செய்தியாளா்கள் கோவையில் தோ்வு நடைபெறும் மையத்தில் உள்ள கண்காணிப்பாளா்களிடம் விசாரித்தனா். ஆனால், தோ்வு ஒத்திவைப்பு குறித்து தற்போதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை என்றனா்.
தோ்வா்கள் சுமாா் 20 நிமிஷங்களுக்குமேல் தோ்வெழுதிய நிலையில், தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக சுற்றறிக்கை வந்தது.
இதையடுத்து, தோ்வா்கள் செய்வதறியாது திகைத்ததுடன், விரக்தியுடன் வீடு திரும்பினா். இது குறித்து தோ்வா்கள் கூறுகையில், இந்தத் தோ்வுக்காக நாங்கள் பல மாதங்களாக படித்து தயாரானோம். தோ்வு ஒத்திவைப்பு எங்களுக்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்றனா்.
தொடர்புடையது

என்டிஏ, சிடிஎஸ் தோ்வுகள்: கோவையில் 2,500 போ் எழுதினா்

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


