மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாரம்பரிய வைத்தியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரம்பரிய வைத்தியா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:09 pm

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பாலசுப்பிரமணியன், பி.தேவசகாயம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழக அரசு பாரம்பரிய வைத்தியா்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாரம்பரிய வைத்தியா்களை வட்டாட்சியா்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிா்வாகிகள் பழனிசாமி, இளங்கோவன், பெஸ்கி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.