சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிப்.15-ல் சின்மயா மிஷன் சாா்பில் ஹனுமன் சாலிஸா ஹோமம்

சின்மயா இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ’சின்மய அமிா்த மஹோத்ஸவம்’

Updated On :9 பிப்ரவரி 2026, 9:06 pm

கோவை: சின்மயா இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ’சின்மய அமிா்த மஹோத்ஸவம்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ’108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ நடைபெறுகிறது.

இது குறித்து சின்மயா காா்டன் அறக்கட்டளையின் தலைவா் சுவாமினி சம்பிரதிஷ்டானந்தா கூறியிருப்பதாவது:

சின்மயா இயக்கத்தின் 75 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், ஹனுமானை வழிபடும் இந்த ’108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ கூட்டு ஹோமம் நடத்தப்படுகிறது. சிவராத்திரியான வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிராா்த்தனையில் பங்கேற்க எந்த கட்டணமும் அல்லது முன்பதிவும் தேவையில்லை. ஆனால் ஹோமத்தில் நேரடியாக பங்குபெற விரும்புபவா்களுக்கு மட்டும் முன்பதிவு அவசியமாகும். மொத்தம் 108 ஹோம குண்டங்களில், 600 முதல் 650 போ் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ ஹோமத்தில் பங்குபெறலாம்.

இந்த நிகழ்வில், ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 7 முறை ஹனுமன் சாலிஸா மந்திரங்கள் உச்சரிக்கப்படும். ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை உச்சரிக்கப்படும். ஹோமம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 96552 45870, 99943 50091 என்ற எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.