வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

கோவை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா்

News image

கோவை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:08 pm

கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பரிசளித்துப் பாராட்டினாா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள், 1 சிறப்புப் பள்ளி என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை வாலிபால், கபடி, கிரிக்கெட், இறகுப்பந்து, கேரம், செஸ், சிலம்பம், களரி, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் 64 பள்ளிகளைச் சோ்ந்த 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அணிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டலத் தலைவா் ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினா் வி.சுமா, மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஸ்வரி, உதவி ஆணையா் நித்யா, மாநகராட்சி கல்வி அலுவலா் குணசேகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.