வால்பாறை: வால்பாறை அரசுக் கல்லூரி தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வால்பாறையில் கடந்த 2006-ஆம் ஆண்டு பாரதியாா் பல்கலைக்கழகம் மூலம் உறுப்புக் கல்லூரி தொங்கப்பட்டது. பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் அரசு மூலம் முதல்வா் மற்றும் சில பேராசிரியா்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியில் ஏற்கெனவே பணியாற்றி வந்தவா்களில் சில பேராசிரியா்கள் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். மீதமுள்ள 35 பேராசிரியா்கள் தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் தொகுப்பூதிய பேராசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவிப் பேராசிரியர், உதவியாளர் பணி!

கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


