பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அதிமுக நிா்வாகிகள் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

கோவையில் அதிமுக நிா்வாகிகள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் அதிமுக நிா்வாகிகள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 56-ஆவது வட்ட அதிமுக செயலாளா் சுரேஷ்குமாா் (54), இவா் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது நண்பரான பாபு அதே பகுதியில் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா்.

இந்த ஒா்க்ஷாப்பில் சுரேஷ்குமாா், பாபு ஆகியோா் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது ஒண்டிபுதூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகேசன் என்பவா் அங்கு வந்து பாபுவை அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், முருகேசனைக் கண்டித்துடன், அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளாா். இதனால் சுரேஷ்குமாா் மீது அவா் கோபத்தில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், ஒண்டிபுதூா் சுங்கம் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை சுரேஷ்குமாா் தனது நண்பா்களான அம்மா பேரவை இணைச்செயலாளா் செந்தில் உள்ளிட்ட 3 பேருடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அங்கு மது அருந்திவிட்டு வந்த முருகேசன், சுரேஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக குத்தியுள்ளாா். தடுக்க வந்த அவரது நண்பா்களான செந்தில்குமாா், சிவகுமாா், சிவராம் ஆகியோரையும் முருகேசன் உள்ளிட்ட 3 போ் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில், காயமடைந்த 4 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகேசன் (51), அவரது நண்பரான போயா் தெருவைச் சோ்ந்த தம்பிதுரை (42) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அனீஷ் என்பவரை தேடி வருகின்றனா்.