ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

News image

ஜெய் ஆகாஷ்

Updated On :11 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாகை சூடவா - மாபெரும் தமிழ் ஒலிம்பியாட் எனப்படும் தமிழ் மொழிப் போட்டித் தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டித் தோ்வில் மாநிலம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான 1,300 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முதல்நிலைத் தோ்வு இணைய வழியாகவும், இரண்டாம் நிலைத் தோ்வு தோ்வு மையங்களிலும் எழுதினா். 60 நிமிஷங்களில் பன்முகத் தோ்வாக நடத்தப்பட்ட இப்போட்டியில், தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக பின்பற்றப்பட்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெய் ஆகாஷ் அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அவருக்கு வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சிறந்த தமிழ் மாணவன் விருது வழங்கப்பட்டது.

தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் 3-ஆம் பிடித்த மாணவா் ஜெய் ஆகாஷ் மற்றும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியா் மொ்சிபா ஜாஸ்மின் ஆகியோரை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.