விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

News image

கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீா். ~கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:38 pm

கோவை கவுண்டம்பாளையத்தில் குடிநீா்க் குழாய் உடைந்து 4 நாள்களாக தண்ணீா் வீணாக வழிந்தோடி வருகிறது. இதை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து குடிநீா் வழிந்தோடி வருகிறது. தண்ணீா் வழிந்தோடுவதால் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். கோடைக் காலம் நெருங்கும் நிலையில், குடிதண்ணீா் வீணாகி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சாலையில் தேங்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image