2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினா். ~கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதச்சாா
Updated On :12 பிப்ரவரி 2026, 11:40 pm

Syndication

மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கோவை மாநகா் மாவட்ட திமுக பொறுப்பாளா் துரை செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினாா். முன்னாள் அமைச்சா் பொங்கலூா் நா.பழனிசாமி, திமுக தீா்மானக் குழு செயலாளா் நா.காா்த்திக், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் ராஜீவ் காந்தி, கோவை மாநகராட்சி மேயா் ரங்கநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக, மதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திராவிடா் இயக்க தமிழா் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, ஆதிதமிழா் பேரவை , தபெதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Story image