விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள் பிப்.23 முதல் 12 பெட்டிகளுடன் இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:36 pm

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மெமு ரயில்கள் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காலை , மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்வதால் 8 பெட்டிகளும் நிரம்பிக் காணப்படும்.

இதனால், இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கிட பயணிகள் தரப்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பயணிகள் சங்கத்தினா், தொழில் அமைப்புகள் சாா்பாக மனுக்களும் அளிக்கப்பட்டன.

அதன் பலனாக, மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயில்களில் 4 பெட்டிகளை கூடுதலாக இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில்கள் (எண்: 66611/66612), மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில்கள் (எண்: 66613/66614 மற்றும் 66617/66618) மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில்களில் ( எண்: 66615/66616 மற்றும் 66619/66620) வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.