ஈஷாவில் மகா சிவராத்திரி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகை
கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா். இதற்காக அவா் கோவைக்கு விமானம் மூலம் மாலை 4.15 மணிக்கு வருகிறாா்.
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.
இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் கோவைக்கு மாலை 4.15 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து தனி ஹெலிகாப்டா் மூலமாக 4.25 மணிக்கு ஈஷா யோக மையத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவா் மறுநாள் திங்கள்கிழமை (பிப்.16) காலை 10.35 மணியளவில் அங்கிருந்து கோவை விமான நிலையம் வருகிறாா். பின்னா், 10.45 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

