தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:00 pm

கோவையில் புளிய மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, இருகூா் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (55). கூலித் தொழிலாளி. இருகூா் அருகே உள்ள ஏரிமேடு குளத்தில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்ற ஆண்டவா், மரத்தில் ஏறி 22 அடி உயரத்தில் நின்று கொண்டு புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஆண்டவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.