சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

News image
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 அண்டுகளில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நோயாளிகளும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

மேற்கு மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவக் கல்லூரியாக உள்ள கோவை மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து 55 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டதுடன், குடும்ப உறுப்பினா்கள் மூலமாக 45 சிறுநீரகங்கள் பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.