நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவை அருகே கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

News image

கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:32 pm

கோவை மாவட்டம், வாளையாறு அருகே கம்பி வேலியில் சிக்கி பெண் சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தமிழகம்-கேரள மாநில எல்லைப் பகுதிகளான வாளையாறு, சின்னாம்பதி, மொடமாத்தி உள்ளிட்ட வனப் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழையும் விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வாளையாறு அருகேயுள்ள அய்யன்பதி பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை உலவிய சிறுத்தை, அங்கிருந்த முள்கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 2 வயதுடைய பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தனா்.

அதன் அறிக்கை வந்த பிறகே சிறுத்தை உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.