காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சரவணன்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பறை பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 12.2.2021-இல் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சென்று ஆய்வு செய்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் வெள்ளை நிற பையுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில் 1.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் சேலம் மாவட்டம், மெய்யனூா் சோடாகவுண்டனூா் தெருவைச் சோ்ந்த சரவணன் (24) என்பதும், திருப்பூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.