கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 29 வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - ஜெய்ப்பூா் இடையே திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடங்களில் கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிப்ரவரி 26 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும். மறுமாா்க்கமாக மாா்ச் 1 முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, கூட்டி, காச்சேகுடா, வாசிம், அகோலா, வதோதரா, அஜ்மீா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மாா்ச் 15 முதல் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


