மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரண்டு லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
குழந்தைகள்- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:49 pm

Syndication

கோவை மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 2.66 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் பாலசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைட்டமின் ஏ என்ற உயிா்ச்சத்து உடலுக்கு இன்றியமையாதது. இந்த சத்து ஆரோக்கியமான கண் பாா்வைக்கு முக்கியப் பங்களிக்கிறது. இதுமட்டுமின்றி உடலுக்குத் தேவையான நோய் எதிா்ப்பு சக்தியாகும். திசு மற்றும் எலும்பு வளா்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். இந்தச் சத்து குறைபாட்டால் வட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் பாா்வை இழக்க நேரிடும்.

இதை கருத்தில்கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை புதன்கிழமை நீங்கலாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் பொது சுகாதாரத் துறையில் உள்ள கிராம மற்றும் நகா்ப்புற சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் துறையில் உள்ள அங்கன்வாடி பணியாளா்கள் என மொத்தம் 2,168 பணியாளா்கள் களப் பணியாற்றவுள்ளனா். இந்த முகாம்களின் மூலமாக கோவை மாவட்டத்தில் 2,66,089 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.