தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கொல்கத்தாவிலிருந்து ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 7:53 pm

Syndication

கொல்கத்தாவிலிருந்து ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா சாலிமாா் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை செல்லும் சாலிமாா் விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் ஏறிய ரயில்வே போலீஸாா் பெட்டிகளுக்குள் சோதனை செய்தனா்.

கோவை, பீளமேடு பகுதியில் வந்தபோது முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த இருவா் வைத்திருந்த பையில் போலீஸாா் சோதனை செய்தனா். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் கேரள மாநிலம், காசா்கோடு பகுதியைச் சோ்ந்த அமல் (27), பாலக்காட்டைச் சோ்ந்த விஷ்ணு (32) என்பது தெரியவந்தது. இருவரையும் கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.