விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோவை அருகே இளம்பெண் கொன்று எரிப்பு

கோவை அருகே இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image
கொலை
Updated On :19 பிப்ரவரி 2026, 10:38 pm

Syndication

கோவை அருகே இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், துடியலூா் வட்டமலைப்பாளையம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகேயுள்ள காலி இடத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டுள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் துடியலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், கருகிய நிலையில் கிடந்தது சுமாா் 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம். அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் எரிந்துள்ளது. தலையில் ரத்தக் காயங்கள் உள்ளன. சிவப்பு நிற உடை அணிந்திருந்துள்ளாா். அப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம். உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனா்.