மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 நபா்களுக்கு 2 மற்றும் 5 ஆண்டுகள் சிறை

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:35 pm

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 நபா்களுக்கு 2 மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆண்டிபாளையம், அமா்ஜோதி புவனேஸ்வரி நகா் பகுதியில் போலீஸாா் கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்தின்பேரில் அப்பகுதியில் இருந்த ஷாஜலால் கஹ்லி மற்றும் 2 பெண்களைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் சட்ட விரோதமாக எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி வங்கதேசத்தில் இருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடித்த நிலையில், திருப்பூா் மாவட்டம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதா் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், ஷாஜலால் கஹ்லிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10.000 அபராதமும், ஒரு பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12,000 அபராதமும், மற்றொரு பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.