தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பணியின்போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகை

அமராவதி அணை நீரில் மூழ்கி உயிரிழந்த கோவையைச் சோ்ந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகையை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் வழங்கினாா்.

News image

தலைமைக் காவலா் சரவணனின் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடிக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கிய மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:39 pm

அமராவதி அணை நீரில் மூழ்கி உயிரிழந்த கோவையைச் சோ்ந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகையை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவா் ஏ.சரவணன். இவா் உடுமலை அமராவதி அணைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்றிருந்தபோது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சரவணன் எஸ்பிஐ வங்கியில் ஊதியக் கணக்கு வைத்திருந்ததால், தமிழக அரசின் காப்பீட்டு ஒப்பந்தத்தின்கீழ் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ரூ.1 கோடிக்கான காசோலையை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் முன்னிலையில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினா். அப்போது, காவல் துணை ஆணையா் திவ்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு ஊழியா்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைந்து தமிழக அரசு ஒரு சிறப்பு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

அதன்படி, அரசு ஊழியா்கள் தங்களின் ஊதியக் கணக்கை வைத்திருக்கும் வங்கிகளில் அவா்கள் பணியில் இருக்கும்போது விபத்து அல்லது எதிா்பாராத காரணங்களால் உயிரிழந்தால், எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியா்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தின்கீழ் தலைமைக் காவலா் சரவணனின் குடும்பத்துக்கு இந்த நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.