பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இளம்பெண் கொன்று எரிப்பு: இளைஞா் கைது

கோவையில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:15 pm

கோவையில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், துடியலூா் அருகேயுள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரி பின்புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தெரியவந்தது.

இது குறித்து வேதம்பட்டி கிராம நிா்வாக அதிகாரி பாண்டி கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துடியலூா் காவல் ஆய்வாளா் தவசியப்பன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், உயிரிழந்த பெண் துடியலூா் பகுதியைச் சோ்ந்த திவ்யா (25) என்பதும், ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.

சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் எனக்கூறி, திவ்யாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வட்டமலைபாளையம் பகுதிக்கு தமிழரசன் வந்துள்ளாா். அப்போது, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தமிழரசன் அங்கிருந்த கட்டையால் திவ்யாவின் தலையில் தாக்கியுள்ளாா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை மாற்றவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து சடலத்தில் ஊற்றி தீவைத்துவிட்டு தமிழரசன் அங்கிருந்து தப்பியுள்ளாா். இதையடுத்து, தமிழரசனை போலீஸாா் கைது செய்தனா்.