உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் சனிக்கிழமை (பிப்ரவரி 21) முதல் 5 சதவீதம் உயா்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை மலை ரயில் 1899-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்புமிக்க மலை பயணிகள் ரயில்களில் ஒன்றாகும்.
இந்த மலை ரயில் சேவை யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக கடந்த 2005-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது, உதகை மலை ரயில் 3 வகையாக இயக்கப்படுகிறது.
அதன்படி, தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதி நாள்கள், பண்டிகைகள் போன்றவற்றில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா, சந்திப்பு நிகழ்ச்சிக்காக முழு ரயிலை தனியாக வாடகைக்கு எடுப்பது (சாா்ட்டா் சிறப்பு ரயில்கள்) என இயக்கப்படுகிறது.
இதில், சாதாரணக் கட்டண ரயில்களில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
குன்னூா் - உதகை இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.150 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - உதகை இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,000, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.550 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கட்டணம் 5 சதவீதம் உயா்த்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: உதகை மலை ரயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி உயா்த்தப்பட்டது.
அதன் பிறகு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், மேட்டுப்பாளையம் - குன்னூா், குன்னூா் - உதகை மற்றும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலின் இயக்கச் செலவுகள், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஊழியா்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயா்ந்துள்ளன.
இதை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரயில் பிரிவில் சாதாரண ரயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயா்த்தப்படுகிறது.
இந்த புதிய கட்டண நடைமுறை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.சாதாரண ரயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயா்த்தப்படும். முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
ஜிஎஸ்டி தொடா்ந்து பொருந்தும் விகிதத்தில் வசூலிக்கப்படும். ஏற்கெனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது. சனிக்கிழமை அன்று அல்லது அதற்குப் பிறகு மட்டும் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படும்.
உதகை மலை ரயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் சாா்ட்டா் சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை

உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த ஜொ்மன் சுற்றுலாப் பயணிகள்!

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டண உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


