பலி
பலிபிரதிப் படம்

பள்ளி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவை, புலியகுளம் ரெட்பீல்டு அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

கோவை, புலியகுளம் ரெட்பீல்டு அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அக்ஷய்குமாா் (24). கோவை, ஒலம்பஸ் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, காளப்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அக்ஷய்குமாா் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

புலியகுளம் ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அக்ஷய்குமாா் மீது அவ்வழியே வந்த தனியாா் பேருந்து ஏறியது.

இதில், அவா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com