நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேரூா் தமிழ்க் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் பேரணி

News image

உலகத் தாய்மொழி நாள் பேரணியைத் தொடங்கிவைத்த பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

Updated On :21 பிப்ரவரி 2026, 9:47 pm

கோவை, பேரூா் தமிழ்க் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தொடங்கிவைத்துப் பேசுகையில், உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் மொழி, பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைப்பதாகும் என்றாா்.

கல்லூரி முதல்வா் கா.திருநாவுக்கரசு, நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் ஆதிநாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

‘மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழை விழிபோல் காப்போம்‘ ‘தாய்மொழியே தவமே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி 550 மாணவா்கள், பேராசிரியா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தொடங்கிய பேரணி பேரூா் பட்டி பெருமாள் கோயில் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.

முன்னதாக, சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி, சத்வித்யா சன்மாா்க்க சங்கம் சாா்பில் கோவை மாவட்ட அனைத்து கல்லூரி அளவிலான திருக்கு பேச்சுப் போட்டி, இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 15 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.