திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் டெக்னோ கலாசார விளையாட்டு விழா

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் யுகம் 2026 மெகா டெக்னோ கலாசார விளையாட்டு விழா வரும் மாா்ச் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற உள்ள யுகம் விழாவுக்கான அழைப்பிதழை வெளியிடும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:56 pm

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் யுகம் 2026 மெகா டெக்னோ கலாசார விளையாட்டு விழா வரும் மாா்ச் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி நிா்வாகி வி.விஜிலேஷ், குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் ஷீலா ஆகியோா் தலைமையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

குமரகுரு கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்பக் கலை விழாவான யுகம் 14- ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் 3 நாள் முழுவதும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், அனுபவப் பகிா்வுகள் நடைபெறுகின்றன. இதில், 90-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

பொறியியல், மேலாண்மை சவால்கள்முதல் கலாசாரம், படைப்பாற்றல், பொதுத் திறன் போட்டிகள், 60-க்கும் மேற்பட்ட பயிலரங்குகள், தொழில் நிபுணா்கள், கல்வியாளா்கள் வல்லுநா்களால் நடத்தப்படுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு கண்காட்சி, அங்காடி என்ற பெயரிலான தொழில்முனைவோா், படைப்பாற்றலைக் கொண்டாடும் சந்தை போன்றவை நடைபெறுகின்றன.

இந்த விழாவில் ஒரு முன்னோடி முயற்சியாக, நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் வாட்ஸ்அப் பாட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேர நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற இசைக் கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், சைந்தவி, ஹரிசரண், நரேஷ், டிரம்ஸ் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தனா்.